தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர், 2020-ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருமணமாகி குழந்தையுள்ள நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா..? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நடிக்க கூடாது என்று எதுவும் இல்லை, திருமண வாழ்க்கை வேறு செய்யும் தொழில் வேறு, இருப்பினும் கவர்ச்சி படத்துக்கு தேவைப்பட்டால் நடிக்க மட்டேன் என்று சொல்ல முடியாது என பதிலளித்தார்.