இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் – இயக்குநர் ரத்னகுமார் பேட்டி

ஒரு ஜனநாயக நாட்டின் முக்கியமான தூண்களில் ஒன்று ஊடகமும், கலையும் தான். ஆனால், சில நேரங்களில் அரசின் போக்கை விமர்சிக்கும் ஊடகங்களின் மீதும், கலைப் படைப்புகளின் மீதும், அதிகார அத்துமீறல்கள் நடந்து வருவது வழக்கம்.

இவ்வாறு இருக்க, சமீபகாலங்களாக, இந்திய பிரதமர் என்று கூறப்படும் வசனங்கள், இந்திய திரைப்படங்களில் நீக்கப்படுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, சந்தானம் நடிப்பில் வெளியாகியிருந்த குலுகுலு படத்திலும், இந்திய பிரதமர் என்று குறிப்பிட்டிருந்த வார்த்தை நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குலுகுலு படத்தின் இயக்குநர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திரைப்படங்களுக்கு சென்சார் வழங்கும்போது, தன்னிச்சையாக சில காட்சிகளை தூக்குவது நியாயமே இல்லாத ஒன்று.

ஜனநாயகத்தை முக்கியமான தூணாக விளங்கும் கலையின் மீது இத்தகைய விரோதத்தை வெளிப்படுத்தாதீர்கள்.. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகமாக மாற்றுதவதற்கு பதில், இந்தியா என்ற பெயரை, United States of India என்று மாற்றிவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News