கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பாஜக இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது.
இந்நிலையில், நேற்று விஜயபுராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ பசவனகவுடா பாட்டீல் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது “இந்தியாவைப் பற்றியோ, இந்து தர்மம், இந்துக்களைப் பற்றியோ பேசினால் நீங்கள் சிறைக்கு அனுப்பப்படுவதற்கு பதிலாக நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்’ என எச்சரித்துள்ளார். மேலும் “உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருந்தபோதே அதிக் அகமது கொல்லப்பட்டதை பார்த்து இருப்பீர்கள்” என அதனை சுட்டிக்காட்டி எச்சரித்தார்.
அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் மட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய அறிக்கைகளும் சூடு பிடித்து வருகிறது. குறிப்பாக பாஜக எம்எல்ஏ-க்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மையினரை நேரடியாக எச்சரித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.