ஆட்சியாளர்களுக்கு ஐ,ஜி, பொன்மாணிக்கவேல் அறிவுரை..!

அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை, ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு செயல்படுவது தவறு என சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் ஐ,ஜி, பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் ஐ,ஜி, பொன்மாணிக்கவேல், சிவனடியார்களுடன் சேர்ந்து உழவாரப்பணி மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாயமான சிலைகள் குறித்து தமிழக அரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.