அல்சைமர் நோய்.. AI தொழில்நுட்பத்தால் முன்கூட்டியே அறிய முடியுமா? ஆய்வில் புதிய தகவல்!

AI என்ற தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தால், பல்வேறு ஊழியர்களின் வேலை பாதிக்கப்படும் என்றும், வேறுசில புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வருகிறது.

இவ்வாறு இருக்க, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தோர் IIT-யின் பேராசிரியர் எம்.டன்வீர், புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார். மருத்துவத்துறையில் AI தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நேட்சர் மெண்டல் ஹெல்த் ஜார்னல் ( Nature Mental Health Journal ) என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில், பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, அல்சைமர் என்று அழைக்கப்படும் மருத்துவ நிலையை பற்றி இன்னும் சிறப்பாக புரிந்துக் கொள்வதிலும், அந்த நிலை மனிதனுக்கு வருவதை முன்கூட்டியே கண்டுபிடிப்பதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்ற கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, மருத்துவ துறையில் நோய்களை கண்டறிவதில், AI-யின் பங்கு குறித்து குறிப்பிடுவதோடு, அந்த நோய்களை சமாளிப்பதில், AI-யின் பங்கு குறித்தும், விவரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பேராசிரியர் எம்.டன்வீர், “அல்சைமர் நிலையை முன்கூட்டியேவும், துல்லியமாகவும் கண்டுபிடிப்பது என்பது மிகவும் முக்கியமானது. இது, இந்த நிலையை நல்ல முறையில் நிர்வகிக்கவும், சரியான சிகிச்சையை வழங்கவும் உதவும்.

மூளையின் செயல்பாடுகள் குறித்து AI தொழில்நுட்பங்களின் மூலம் புரிந்துக் கொள்வது, நோயாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News