பிரபல நடிகரிடம் செல்போன் பறித்த திருடர்கள்!

அபியும் நானும், மாயன், குரங்கு பொம்மை, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் இளங்கோ குமரவேல்.

இவர், சில திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்நிலையில், இளங்கோ குமரவேல், கடந்த வியாழக்கிழமை அன்று, விடுதி ஒன்றில் இருந்து, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.