தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு, சாப்ரூன் நிசா என்பவரை, 3-வது திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமண நிகழ்வுக்கு, யுவனின் தந்தை இளையராஜா வரவில்லை என்று கூறப்படுகிறது. இது, அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தனது தந்தை திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்பது குறித்து, யுவன் சங்கர் ராஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, “திருமணத்திற்கு நான் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நான் வந்தால், என்னை கவனிப்பதற்காக, சில ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை வரும். அதனால், சிரமங்களை கொடுக்க வேண்டாம்” என்று யுவனிடம், இளையராஜா கூறியுள்ளாராம்.
மேலும், இஸ்லாமிய மதத்திற்கு யுவன் மாறியதற்கு, அவர் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.