Connect with us

RajNewsTamil

ரஜினி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

சினிமா

ரஜினி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில், கூலி என்ற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த டைட்டில் டீசரில், தனது பாடலின் இசை இடம்பெற்றிருப்பதாக கூறி, கூலி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், தனது இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து தனது இசையை நீக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு இசையை நீக்காவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top