தமிழ் ரசிகர்கள், இந்தி பாடல்களின் மீது கவனம் செலுத்தி வந்த காலத்தில், இசையில் புதுமை செய்து, தமிழ் பாடல்களையே மீண்டும் கேட்க வைத்தவர் இளையராஜா.
80-களின் காலகட்டத்தில், பெரிய நடிகர்களின் கால் ஷீட்டுக்கு காத்திருப்பதை விட, இளையராஜாவின் கால்ஷீட்டுக்கு தான் பல்வேறு தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர்.
80-களில் வெளியான 90 சதவீத திரைப்படங்களுக்கு அவர் மட்டுமே இசையமைத்து வந்தார். இவ்வாறு இருக்க, ஒரே ஒரு நடிகரின் திரைப்படத்திற்கு மட்டும், ஒரு முறை கூட, இளையராஜா இசையமைத்ததில்லையாம்.
அந்த நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தான். காரணம் என்னவென்றால், அவரது திரைப்படங்களுக்கு அவரே இசையமைத்துக் கொள்வாராம். அந்த பாடல்களும், சூப்பர் ஹிட் அடித்துவிடுமாம்.