பொதுப்பணித்துறையின் உத்தரவின்படி, டெல்லியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மற்றும் மத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ள மத வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லியின் பஜன்புரா பகுதியில் ஹனுமன் கோயில் மற்றும் மஜார் ஆகியவற்றை டெல்லி பொதுப்பணித்துறை அகற்றியது. இதையடுத்து பஜன்புரா பகுதியில் பலத்த போலீஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
சஹாரன்பூர் நெடுஞ்சாலைக்கான சாலையை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.