இந்தியாவின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் தேவை – சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக இருந்த போதும், சீர்திருத்தங்கள் தேவை என்று, சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் பியர் ஆலிவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் ஐஎம்எப்-ன் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர், டிஜிட்டலைசேஷன் உள்ளிட்ட நவீன முறைக்கு பல்வேறு சேவைகளை இந்தியா நடைமுறைப்படுத்தியுள்ள போதும், சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக கூறினார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஓரளவு வலுவாக இருப்பதாகவே அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வரும் நிதிநிலை அறிக்கையில் பணவீக்கத்தை குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அதிகளவில் இடம்பெறும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.