சென்னை திருவொற்றியூர் அருகே சித்தி மகளை கர்ப்மாக்கிவிட்டு, தலைமறைவாகியுள்ள சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர் ராமகிருஷ்ணநகரை சேர்ந்த நபரின் மகள், அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள், அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. பெரியம்மா மகன் முகேஷ், நெருங்கி பழகியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து, தலைமறைவாகியுள்ள முகேஷை போலீசார் தேடி வருகின்றனர்.