“2024 தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி” – அண்ணாமலை பேட்டி

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மஹாலில் பா.ஜ.க. மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று காலை தொடங்கியது.

கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் 66 பேரும், மாநில நிர்வாகிகள் 65 பேரும், மாநில அணி பிரிவு 38 பேரும், மாவட்ட பார்வையாளர்கள் 41 பேரும் என மொத்தம் 221 பேர் வரை கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு அண்ணாமலை வர தாமதமான நிலையில் கேசவ விநாயகம் , எச்.ராஜா உள்ளிட்டோர் நீண்ட நேரமாக மேடையிலேயே அமர்ந்திருந்தனர். கூட்டத்தில் மேடையில் பேசிய பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் : நாம் பல முறை தனித்து போட்டியிட்டுள்ளோம். தனித்து போட்டியிடவது புதிதல்ல, நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டு இருக்கிறது என்றார்.

இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது : அடுத்த 7 மாத காலத்திற்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது மத்திய அரசுத் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும்.

கூட்டணி முடிவை டெல்லி தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன். இனி முடிவு தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News