சினிமா பார்க்க போனபோது வாக்குவாதம்.. 4-வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்..

ஹிமாச்சல் மாநிலத்தை சேர்ந்தவர் அர்ச்சனா திமன். பெங்களூரில் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் இவர், டேட்டிங் செயலி மூலமாக, அதேஷ் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே, அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, இருவரும் சினிமாவிற்கு சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டின் 4-வது மாடியில் இருந்து குதித்த அர்ச்சனா, பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகளின் மரணத்தை தாங்க முடியாத அர்ச்சனாவின் தந்தை, அவரது உயிரிழப்புக்கு அதேஷ் தான் காரணம் என்றும், அவர் தான் தன் மகளை கீழே தள்ளிவிட்டார் என்றும் புகார் அளித்தார்.

இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், அதேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவரிடம் இதுகுறித்து கேட்டதற்கு, அந்த பெண் தான் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார் என்று, அதேஷ் கூறியுள்ளார். உண்மை என்ன என்பதை கண்டறியும் முயற்சியில், காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News