Connect with us

Raj News Tamil

வைரமுத்து குரலில்; கருணாநிதி பற்றி வீடியோ வெளியிட்ட நபர் கைது!

தமிழகம்

வைரமுத்து குரலில்; கருணாநிதி பற்றி வீடியோ வெளியிட்ட நபர் கைது!

X வலைதளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி கவிஞர் வைரமுத்து குரலில் அவதூறாக வீடியோ வெளியிட்டதாக திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இளையராஜா புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் LTTS நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் இவர் தன்னுடைய X வலைத்தளத்தில் பதிவிட்டதும் தெரியவந்தது அதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

More in தமிழகம்

To Top