வேறொரு பெண்ணுடன் தகாத உறவு..! கண்டித்த மனைவியை கார் ஏற்றி கொன்ற சினிமா பிரபலம்..!

பாலிவுட்டில் டிஸ்கோ, ஷர்மாஜி கி லக் கை, பூட்டியப்பா ஆகிய படங்களை தயாரித்தவர் கமல் கிஷோர்.

இவர் மும்பை மேற்கு அந்தேரியில் வேறொரு பெண்ணுடன்,காருக்குள் இருப்பதை பார்த்த அவரது மனைவி கிஷோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் வாக்குவாதம் முற்றவே கோபமாக, அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார். ஆனால் அவரை செல்ல விடாமால் தடுத்த கணவர், சற்றும் எதிர்பார்க்காமல் தன் ஓட்டிச்சென்ற காரை, மனைவி மீது ஏற்றிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.