கலைஞர் நினைவிடம் திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

கலைஞர் நினைவிடம் மற்றும் புனரமைக்கபட்ட அண்ணா நினைவிடம் வரும் 26 ம் தேதி திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது கலைஞர் நினைவிடம் எப்போது திறக்கப்படும் என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் நினைவிடம் மற்றும் புனரமைக்கபட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் வரும் 26-ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை விழாவாக கொண்டாட விருப்பமில்லை, இருப்பினும் இந்த அவையில் உள்ள உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு பேரவைதலைவர் வாயிலாக அழைப்பு விடுகிறேன் என்றார்.

RELATED ARTICLES

Recent News