வருமான வரித் துறை, அமலாக்கத்துறை இவையெல்லாம் பாஜகவினுடைய அணிகள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் நீட் தேர்வுக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் கையெழுத்துகளைப் பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்:
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. மாணவர் அணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி என்று பல அணிகள் உள்ளன. அதுபோல பாஜகவின் ஒரு அணிதான் வருமான வரித் துறை. ஐடி, அமலாக்கத்துறை இவையெல்லாம் பாஜகவினுடைய அணிகள். அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை சட்டப்படி சந்திப்போம்” என பதில் அளித்தார்.