வருமானவரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கல் உரையின்போது, பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை அவர் அறிவித்தார்.

மேலும், அனைவரும் எதிர்பார்த்த அறிவிப்புகளில் ஒன்றான, வருமானவரி விலக்கு உச்ச வரம்பை, அதிகரித்துள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, தனிநபர் வருமான வரி விலக்கு, 7 லட்சம் ரூபாயில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வருமான வரி முறையில் ரூபாய் 12 லட்ம் வரை இனி வரி இல்லை. மேலும், 75 ஆயிரம் கழிவும் வழங்கப்படும் என்று, மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News