மக்கள்தொகை அதிகரிப்பு – பெண்களிடம் வேண்டுகோள் விடுத்த ரஷ்ய அதிபர்..!

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் ரஷியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே தொழிலாளர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

இதனால் பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 8 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் நாட்டின் 1,000 ஆண்டு கால பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

உக்ரைனுடனான போரில் இதுவரை சுமார் 3 லட்சம் ரஷியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான் புதின் இவ்வாறு முடிவு எடுத்திருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

RELATED ARTICLES

Recent News