அதிகரிக்கும் ஆசிட் வீச்சு வழக்குகள் : முதல் இடத்தில் மேற்கு வங்கம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை குறைக்க அரசு பல புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டுவந்து கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2018 மற்றும் 2020 க்கு இடையில் ஆசிட் தாக்குதல்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 659 என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 160 வழக்குகளுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. 115 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 35 வழக்குகளுடன் ஒடிசா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தலைநகர் டெல்லியில் இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 23 ஆசிட் வீச்சு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.