அதிகரிக்கும் கொரோனா! – தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் சிங்கப்பூர் அரசு!

உலகயே புரட்டிப்போட்ட கொரோனா கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பெரும் தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

தற்போது பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது அதற்கு முந்தைய வாரத்தை விட சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும். இதையடுத்து சிங்கப்பூர் அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறது. மேலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைபிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News