Connect with us

Raj News Tamil

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார்..?

அரசியல்

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார்..?

காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இதுவரை 4 முறை கூட்டப்பட்டது. அடுத்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணியளவில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

அதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

More in அரசியல்

To Top