பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இவ்வாறு வலுவான கட்சியாக பாஜக இருந்ததால், அதனை வெல்ல வேண்டும் என்பதற்காக, எதிர்கட்சிகள் அணைத்தும் ஒன்றிணைந்து, இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கினர்.
இந்நிலையில், இந்த கூட்டணி சந்தித்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தமிழக அளவில், இண்டியா கூட்டணியின் அங்கமான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.
ஆனால், இந்திய அளவில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் முன்னிலை வகித்து வருகிறது.
இவ்வாறு இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
“கடந்த காலம்!-நாட்டைக் காரிருள் சூழ்ந்த காலம்!
பரிவார் கும்பலால்- உரிமைகள் பறிபோன காலம்!
பத்தாண்டு காலம்! – நாடு பாழான காலம்!
இன்று- இருள் விலகும்!- சனநாயக ஒளி பரவும்!
இந்திய நாடு மீளும்! – நம் இந்தியா கூட்டணி ஆளும்!”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.