ஏழை குடும்பங்களுக்கு வங்கி கணக்கில் ரூ.8500 – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி ஜூன் 4-ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜூலை 5-ஆம் தேதி கோடிக்கணக்கான ஏழை பெண்களின் வங்கிக் கணக்குகளில் 8500 ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்து குப்பையில் எறிவோம் எனவும் ராகுல் காந்தி ஆவேசமாக குறிப்பிட்டார்.

தேர்தலுக்குப் பிறகு அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்பதால் பிரதமர் மோடி தன்னை பரமாத்மா அனுப்பியதாக கதை புனைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News