வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி புள்ளிவிவர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2023 ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை 12,500 கோடி டாலராக இருக்கும் என்றும், இது வெளிநாடுகளில் பணிபுரிந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பும் மொத்த பணத் தொகையில், இந்தியர்களின் பங்கு 66% சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
அதன்படி, இந்தியர்கள் கிட்டத்தட்ட 10.38 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டில் இது 63 சதவீதமாக இருந்தது. இந்த பட்டியலில் மெக்சிகோ 2வது இடத்தையும் சீனா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் மூன்று, நான்கு, ஐந்து இடங்களை முறையே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.