யூடியூப்பின் விதிமீறலில் இந்தியாவிற்கே முதலிடம்! வெளிவந்த அதிர்ச்சி அறிக்கை!

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் சமூகசெயலி யூடியூப்.பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வீடியோ உருவாக்குபவர்களும் அதிகமாகினர்.அதன்படி பயனர்கள் தரமற்ற மற்றும் யூடியூப் விதித்துள்ள சமூக வழிகாட்டுதல்களுக்கு உட்படாதவீடியோக்களும் பெருகின.

அவற்றை நீக்கும் நடவடிக்கைகளை யூடியூப் நிர்வாகமும் உயர்த்தியது. அப்படி நீக்கப்படும் வீடியோக்களில், தற்போது உலகளவில் இந்தியா முதலிடத்திற்கு வந்திருக்கிறது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக யூடியூப் சமூக வலைதள நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, சமூக விதிமுறைகளை மீறியதற்காக, இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில், உலகம் முழுவதிலும் 64.8 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது.

இந்தியாவில் இதே காலகட்டத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளிடையே நீக்கப்பட்ட வீடியோக்கள் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் ஆகும்.இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 6.55 லட்சம், ரஷ்யாவில் 4.92 லட்சம் பிரேசில் நாட்டிலிருந்து 4.50 லட்சம் என இதர நாடுகளின் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News