இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதுகின்றன.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் தொடரின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன. ஒரு நாள் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அதாவது 4 ஆண்டுக்கு கழித்து இரு அணிகளும் முதல் முறையாக சந்திப்பதால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

RELATED ARTICLES

Recent News