2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
கொரோனாவில் இருந்து பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இந்தியாவில் நேற்று முன்தினம் 148 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 895 ஆக உள்ளது.
தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.