நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றின் குரூப் – 1 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ரோஹித் சர்மா 23 ரன்களையும், அவரை தொடர்ந்து விராட் கோலி (37), ரிஷப் பண்ட் (36), ஷிவம் துபே (34) ரன்கள் குவித்து அணியை வலுப்படுத்தினர்.
இறுதியில், ஹர்திக் பாண்டியா (50) அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணி பந்துவீச்சில் ரிஷாத் அஹ்மது மற்றும் தன்சிம் அஹ்மது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியில், தொடக்கத்தில் லிட்டன் தாஸ் 13 ரன்களுடன் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்.
ஹசன் மஹ்மூது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 ரன்களை குவித்த போதிலும், பிற வீரர்களால் நிலைத்து ஆட முடியவில்லை.
இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களை மட்டும் குவித்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.