பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் 19-வது போட்டி இந்தியா- பாகிஸ்தான் விளையாடின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரௌஃப், நசீம் ஷா ஆகியோர் தலா 3, முகமது அமீர், ஷாஹீன் அஃப்ரிதி 1 விக்கெட் சாய்த்தனர்.

பின்னர் 120 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அணியின் கேப்டன் பாபர் அஸம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் இறங்கினர்.

பாபர் அசாம் 13 ரன்களில் பும்ரா ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கானும், பஹர் ஜமான் தலா 13 ரன்களில் வெளியேறினர்.

அப்போது அணியின் ஸ்கோர் 12.2 ஓவரில் 73 ஆக இருந்தது. அதன் பின்னர் இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினர்.

கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய அந்த ஓவரில் நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை விரட்ட, பாகிஸ்தான் அணிக்கு 11 ரன்களே கிடைத்தது.

இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

RELATED ARTICLES

Recent News