2022-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை, தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 180 ரன்கள் என்ற இலக்கோடு, ஆடத் துவங்கியது. தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நியூசிலாந்து வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
ஆட்டத்தின் இறுதியில், 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து, நியூசிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. இதன்மூலம், டி20 உலகக்கோப்பை தொடரில் தனது 2-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.