Connect with us

Raj News Tamil

ஒரே ஒரு பந்து.. ஒட்டுமொத்தமாக மாறிய மேட்ச்.. அம்பயரால் ஆஸ்திரேலியா அதிருப்தி..

விளையாட்டு

ஒரே ஒரு பந்து.. ஒட்டுமொத்தமாக மாறிய மேட்ச்.. அம்பயரால் ஆஸ்திரேலியா அதிருப்தி..

2023-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி முடிந்த கையோடு, இந்தியாவும், ஆஸ்திரேலியாவும், மீண்டும் ஒரு டி20 தொடரில் மோதின. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய இந்திய அணி, எளிமையாக 3 போட்டிகளில் வென்று, தொடரை கைப்பற்றியது.

மேலும், ஆஸ்திரேலிய அணி, ஒரேயொரு போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும், தொடரின் 5-வது போட்டியை நேற்று விளையாடினர்.

இதில், இந்தியா தோல்வியை தழுவினாலும், இந்தியா தான் தொடரின் வெற்றியாளர் என்று கருதப்பட்டது. இருப்பினும், இந்த போட்டியிலும், பெரும் பரபரப்பு இருந்தது. அதாவது, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழந்த இந்திய அணி, 160 ரன்கள் எடுத்திருந்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விளையாடினர். இறுதியில், 6 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழல் இருந்தது.

ஆனால், முதல் 3 பந்துகளில் ரன்கள் எதுவும் எடுக்காமல், ஆஸ்திரேலிய வீரர்கள் செதப்பினர். கடைசியாக, 3 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. 4-வது பந்தில், ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது.

5-வது பந்தில், ஸ்ட்ரைக்கில் இருந்த நேத்தன் எல்லிஸ், ஓங்கி அடித்தார். ஆனால், அந்த பந்து, அர்ஷ்தீப் சிங்கின் கையில் பட்டு, மிஸ்ஸானது. இதனால், பந்து நிச்சயம் பவுண்டரி செல்லும் என்று, ஆஸ்திரேலிய வீரர்கள் கணித்தனர்.

ஆனால், பந்து அம்பயரின் காலில் பட்டு, அங்கேயே நின்றுவிட்டது. இதனை பார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள், அதிருப்தி அடைந்தனர்.

இறுதியில், 6 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 5-வது பந்து, பவுண்டரியை நோக்கி சென்றிருந்தால், இறுதிக் கட்டம் வரை, ஆட்டம் த்ரில்லாகவே இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More in விளையாட்டு

To Top