இந்திய அணி த்ரில் வெற்றி!

டி-20 உலகக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி வரும் இந்திய அணி, 3-க்கு 2 போட்டிகளை வென்று, இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று இந்தியாவிற்கும், வங்கதேசம் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.

இதில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு, 184 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, இரண்டாம் பகுதி தொடங்கும் நேரத்தில் மழை பெய்ததால், போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், மழையின் காரணமாக, DLS முறையின்படி, இலக்கு குறைக்கப்பட்டது.

அதன்படி, 16 ஓவர்களில், 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம், தொடங்கும் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது. இருப்பினும், தொடர்ந்து விளையாடி வந்த வங்கதேச அணி, கடைசி ஒரு பந்தில், 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

பெரிய ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாததால், இலக்கை அடைய முடியாமல், கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது. இதன்மூலம், இந்திய அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.