படிப்படியாக குறைந்து போன இந்தியன் 2 படத்தின் வசூல்..!!

ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், விவேக், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்திற்க்கு இசை அமைத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் நீளம் அதிகமாக உள்ளதாகவும், படம் எதிர்பார்த்த அளவு இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன.

படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ.25 கோடி வசூல் செய்தது. கலவையான விமர்சனங்களால் படத்தின் வசூல் படிப்படியாக குறைய தொடங்கியது. படம் வெளியாகி இரண்டு வாரம் ஆன நிலையில் தற்போதுவரை இந்திய அளவில் ரூ.80 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News