இந்தியன் 2-க்கு பரிதாப நிலையா? வசூல் நிலவரம்!

பொதுவாக ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவிடும்.

ஆனால், எந்திரன் படத்திற்கு பிறகு வெளியான ஷங்கரின் படங்கள், வசூல் ரீதியாக மட்டுமே வரவேற்பை பெற்றது. இந்த முறை, வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் அவரது திரைப்படம் மண்ணை கவ்வியுள்ளது.

அதாவது, ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் 8 நாள் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, இப்படம், உலக அளவில் 146 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தியன் 2, முதலீடு செய்யப்பட்ட பணத்தை கூட எடுக்க முடியாத பரிதாப நிலைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News