Connect with us

Raj News Tamil

இந்தியன் 2 ரிலீஸ் அப்டேட்! போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு!

சினிமா

இந்தியன் 2 ரிலீஸ் அப்டேட்! போஸ்டருடன் வெளியிட்ட படக்குழு!

ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், தற்போது 2-வது பாகமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பாகத்தை, லைக்கா நிறுவனம் தயாரித்த நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார்.

பல்வேறு இளம் டெக்னீஷியன்களை கொண்டு, இப்படத்தை இயக்கி வரும் ஷங்கர், பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு, ஒருவழியாக எடுத்து முடித்துள்ளார். இந்நிலையில், இந்தியன் 2-ஆம் பாகத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த போஸ்டரில், இப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, Indian2 என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது.

More in சினிமா

To Top