லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
போட்டிக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற கணக்கில் தான், இந்த படத்தை அந்த தேதியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். ஆனால், தற்போது பிரம்மாண்ட திரைப்படம் ஒன்று, லியோவுக்கு போட்டியாக வெளியாக வாய்ப்பு உள்ளதாம்.
அதாவது, ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த பணிகள் விரைவில் முடிவடைந்தால், இந்தியன் 2 திரைப்படமும், லியோ படமும் ஒரே நேரத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இதனால், லியோ படத்தின் வசூல் பாதிக்கும் அபாயமும் உள்ளது.