Connect with us

Raj News Tamil

வெளியான இந்தியன் 2 அப்டேட் ! குஷியில் ரசிகா்கள் !

சினிமா

வெளியான இந்தியன் 2 அப்டேட் ! குஷியில் ரசிகா்கள் !

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், மற்றும் முன்ணனி
நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனா்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தநிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

மேலும்,’இந்தியன் 2′ படத்தின் புதிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் ‘Received copy சேனாபதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதனை பாா்த்த கமல் ரசிகா்கள் இச்செய்தியை ஷோ் செய்து கொண்டாடி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top