ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில், கடந்த 1996-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம், இந்தியன். இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது.
ஆனால், எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் பெறவில்லை. இவ்வாறு இருக்க, இந்த திரைப்படத்தின் 3-ஆம் பாகம் தொடர்பான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்த நிலையில், 3-ஆம் பாகத்தை தயாரிப்பதற்கு, அந்த நிறுவனம் முன்வரவில்லையாம். இதனால், 3-ஆம் பாகத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.