Connect with us

Raj News Tamil

இந்திய பொருளாதாரம் உலக அளவில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது: நிர்மலா சீதாரமான்!

இந்தியா

இந்திய பொருளாதாரம் உலக அளவில் 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது: நிர்மலா சீதாரமான்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமான் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் மஹாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் 40,011 பயனாளிக ளுக்கு ரூ.1,143 கோடி மதிப்பிலான கடன் தொகையை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்மலா சீதாரமான் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 10-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 3-ஆவது இடத் துக்கு இந்திய பொருளாதாரம் முன்னேறி விடும். வலிமையான பொருளாதார நாடு களைவிட இந்தியாவில் மக்களின் வாழ்க் கைத் தரம் நல்ல நிலையில் உள்ளது.

நாட்டு மக்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கான திட்டங்களை வடிவ மைத்து பலனடையச் செய்வதில் முதன் மையான அரசாகபாஜக அரசு உள்ளது.

அதேபோல் பாஜகவில் மட்டுமே சிறப் பாக பணியாற்றும் தொண்டர்களுக்கு கட்சியின் உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள தலைவர்கள் (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் புகைப்படங்களை மட்டுமே எடுத்து வருகின்றனர். அவர்களின் கூட்டணி சிதறிவிட்டது.

ஆனால் பிரதமர் மோடி விவசாயிகளுக் காக கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறார் என்றார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top