உலகிலேயே தலைசிறந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு!

உலகிலேயே தலைசிறந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

டெல்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:

பருவநிலை மாறுபாடு பிரச்னையைக் கண்டறிவதில் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நமது நாட்டில் வானிலையை கணிக்க பயன்படுத்தப்படும் நடைமுறையும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உலகிலேயே தலைசிறந்தது என்பது கடந்த 5 ஆண்டுகளாக நமது முன்கணிப்புகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவில் வானிலையை கணிக்க பயன்படுத்தப்படும் டாப்ளா் ரேடார்கள் இப்போது 35 உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இவை 38 ஆக அதிகரிக்கப்படும். இதன் மூலம் நாட்டில் வானிலை முன்கணிப்பை அனைத்து இடங்களுக்கும் மேலும் துல்லியமாக கூற முடியும்.

புயல், பெரு மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்களை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், வானிலை முன்கணிப்புகள் மூலம் பேரிடா்களால் ஏற்படும் சேதங்களை வெகுவாக குறைக்க முடியும். பல்வேறு புயல்கள் பயணிக்கும் திசையை சரியாக கணித்துக் கூறுவதில் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில ஆண்டுகளாக வெகு சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

RELATED ARTICLES

Recent News