ஐ.நா-வில் பணியாற்றும் இந்தியர் ஹமாஸ் பகுதியில் பலி! அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேல் நாட்டிற்கும், ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியில் இருந்து, போர் நடந்து வருகிறது. அன்றில் இருந்து இன்று வரை நடக்கும் இந்த போரில், பல்வேறு பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

ஆனால், இதற்கு முன்பு வரை, ஐ.நாவின் சர்வதேச ஊழியர்கள் காஸாவில் உயிரிழந்தது கிடையாது. இந்நிலையில், முன்னாள் இந்தியா ராணுவத்தின் பணியாளரும், ஐ.நாவின் பாதுகாப்புத்துறையில் ( DSS ) பணியாற்றி வந்தவருமானவர், ரஃபா பகுதியில் நடந்த தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதாவது, ரஃபா பகுதியில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு, ஐ.நாவின் வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது நடந்த தாக்குதலில் தான், அவர் உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த போரில், ஐ.நாவின் சர்வதேச ஊழியர் உயிரிழந்தது இதுதான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, உடன் பயணித்த இன்னொரு ஐ.நா பாதுகாப்பத்துறையின் பணியாளரும், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ், “ஐ.நா பாதுகாப்பத்துறையினர் பணியாளர் உயிரிழந்திருப்பது மற்றும் இன்னொரு பணியாளர் காயம் அடைந்திருப்பது குறித்து அறிந்து கடும் சோகத்தில் ஆழ்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

அதாவது, பொதுச் செயலாளரின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், ஐ.நாவின் பணியாளர்கள் மீது நடத்தப்படும் அனைத்து விதமான தாக்குதல்களுக்கும் இரங்கல்களை கூறினார்.

மேலும், இதுகுறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் தொடர்ந்து, காஸா உடனான போரில், பல்வேறு பாதகமான விளைவுகள் நடந்து வருகிறது. அந்த விளைவால், ஊர் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, மனிதாபிமான பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும், உடனடியான போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் அன்டோனியோ கட்டரஸ் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News