இந்திய அணி, தாய்லாந்து அணியுடன் மோதல்!

ஆசிய கோப்பை பெண்கள் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில், இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும், 8-வது ஆசிய கோப்பை பெண்கள் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர், தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

6 லீக் போட்டிகளில், ஐந்தில் வெற்றிப் பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
நடப்புத் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்ப்பட்டது.

அதே உத்வேகத்தை இன்றைய போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் லீக் போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்த தாய்லாந்து அணி, பழித்தீர்க்கும் முனைப்பில் களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.