Connect with us

Raj News Tamil

வருடத்தில் இரண்டு முறை அட்மிஷன்.. பல்கலைக்கழக மாணியக் குழு புது அறிவிப்பு..

இந்தியா

வருடத்தில் இரண்டு முறை அட்மிஷன்.. பல்கலைக்கழக மாணியக் குழு புது அறிவிப்பு..

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களும், வேறு நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களும், வேறு வேறு மாதிரியான விதிமுறைகள், நிர்வகிக்கும் முறைகளை பின்பற்றி வருகின்றன.

அதன் அடிப்படையில், தற்போது இந்தியாவில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தான், கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெற முடியும். இந்த நிலை இருப்பதால், சில அசாதாரண சூழ்நிலைகளால் வாய்ப்பை இழந்த மாணவர்கள், ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

ஆனால், வரும் கல்வியாண்டில், ஆண்டுக்கு இரண்டு முறை அட்மிஷன் வழங்கும் முறை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பல்கலைக்கழக மாணியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார், பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், “இந்திய பல்கலைக்கழகங்கள் வருடத்தில் இரண்டு முறை, அட்மிஷன் வழங்க முடிந்தால், பல்வேறு மாணவர்கள் பலன் அடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

அதாவது, தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவது, உடல்நலக்குறைவு, தனிப்பட்ட காரணங்களால் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில், அட்மிஷன் பெற தவறிய மாணவர்கள், இந்த புதிய நடைமுறையின் மூலம் பயன் அடைவார்கள்” என்று ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

“ஆண்டுக்கு இரண்டு முறை பல்கலைகழகங்கள் அட்மிஷன் வழங்கும் நடைமுறை, மாணவர்கள் ஊக்குவிப்புடன் இருப்பதற்கு உதவி புரியும். அதன்பிறகு, தற்போதைய நடைமுறையில் அட்மிஷனுக்கான வாய்ப்பை இழந்தவர்கள், ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லாமல் ஆகிவிடும்” என்று கூறினார்.

“இந்த நடைமுறை தொடங்கப்பட்டால், தொழில் நிறுவனங்களும், கேம்பஸ் இன்டர்வியூக்களை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவார்கள். இது, பட்டதாரிகளுக்கு வேலைவாயப்புகளை அதிகரிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

“உலக அளவிலான பல்கலைக்கழகங்கள், ஏற்கனவே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றனர். இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்ற தொடங்கினால், தங்களது சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் மற்றும் மாணவர்களையும் பரிமாற்றிக் கொள்ள முடியும். இதன் விளைவாக, நம்முடைய உலக போட்டித்திறன் அதிகரிக்கும். மேலும், நம்முடைய கல்வியும், உலக கல்வி தரத்துடன் ஒத்துப்போகும்” என்று கூறினார்.

More in இந்தியா

To Top