துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் தங்கப் பதக்கத்தை வென்றனர்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.
இதில், மகளிர் 25 மீட்டர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர், ரிதம் சங்வான், ஈஷா சிங் ஆகியோர் மேலும் ஒரு தங்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் இந்திய அணி மொத்தம் 1,759புள்ளிகளை பெற்றுள்ளது.
இதனால் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் தற்போது பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.