நேபாள நாட்டில் நேற்று 72 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
காத்மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் ஞாயிறு காலை 11 மணி அளவில் விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனு ஜெய்ஸ்வால் (28) என்ற இளைஞர் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன்பு பேஸ்புக் லைவ் வீடியோ ஒன்று எடுத்துள்ளார். அடுத்த சில நொடிகளில் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் விமான விபத்தின் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.