இந்தியாவின் தலைநகர் டெல்லியில் லவ் குஷ் ராம் லீலா கமிட்டி சார்பில், ராம் லீலா என்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நமது நாட்டில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று, நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், ராமர் ஒரு சிறந்த லட்சியவாதி. அவரது லட்சியங்களை, பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் சிறப்பான வழியாக, இந்த ராம் லீலா நிகழ்வு இருந்து வருகிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் தான், அதன் பெரிய வலிமை. மகாபாரதமும், ராமாயணமும் நமது நாட்டிற்கு மட்டுமானது கிடையாது.
இது இந்த வெளிநாட்டு மக்களாலும், அங்கீகரிக்கப்படுகிறது. கடவுள் ராமர், நமது பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார்.
இப்போது, அயோத்தி பகுதியில், மிகவும் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில், நமது நாட்டில், ராம ராஜ்ஜியம் அமைக்கபடும் என்று உறுதி அளிக்கிறேன்” என்று கூறினார்.