உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் அகமதாபாத்தில் நடந்தது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு சுருண்டது. பாபர் அஸாம் 50 ரன்களும், ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா பாகிஸ்தான் பந்துவீச்சை தெறிக்கவிட்டார்.
சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டிய அவர் 63 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
விராட் கோலி 16 ரன்களில் அவுட் ஆன நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக வெற்றிப்பாதைக்கு அணியை அழைத்து சென்றார். அவர் 31வது ஓவரின் 3வது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதம் விளாச, இந்திய அணியும் 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மறுமுனையில் கே.எல்.ராகுல் 19 ரன்களுடன் களத்தில் நின்றார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், ஹசன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.