Connect with us

Raj News Tamil

மீண்டும் பரவுத் தொடங்கிய மர்ம காய்ச்சல்..! மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்…
இந்த மாத்திரை எல்லாம் போடாதீங்க..! – ICMR அறிவுறுத்தல்.

தமிழகம்

மீண்டும் பரவுத் தொடங்கிய மர்ம காய்ச்சல்..! மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்…
இந்த மாத்திரை எல்லாம் போடாதீங்க..! – ICMR அறிவுறுத்தல்.

இந்தியாவில் திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று வேகமாக பரவிக் கொண்டு இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை புண் மற்றும் உடல் வலி ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்.

மருத்துவ அமைப்பின் கூற்றுப்படி, “தொற்றுநோய் பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். காய்ச்சல் மூன்று நாட்கள் முடிவில் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும்”, என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது பரவிக் கொண்டிருக்கும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்புக்கு அபாயம் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 92 சதவீதம் பேருக்கு காய்ச்சலும், 86 சதவீதம் பேருக்கு சளி, இருமலும், 27 சதவீதம் பேருக்கு மூச்சு திணறலும் உள்ளதாக கூறப்படுகிறது.

தவிர்க்கப்பட வேண்டிய ஆன்டி-பயாட்டிக்ஸ்

  • அசித்ரோமைசின்
  • அமோக்ஸிக்லாவ்
  • அமோக்ஸிசிலின்
  • நார்ஃப்ளோக்சசின்
  • சிப்ரோஃப்ளோக்சசின்
  • ஆஃப்லோக்சசின்
  • லெவ்ஃப்ளோக்சசின்
  • ஐவர்மெக்டின்

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வராமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை

  • கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் குளிக்க வேண்டும்.
  • அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • வாய் மற்றும் மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top